தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியம் மகேந்திரமங்கலம் ஊராட்சியில் உள்ள சீங்கேரி மற்றும் கதிரம்பட்டி பாண்டுகொட்டாய் மலைகிராமங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 15வது நிதிக்குழு மானியத்தின் கீழ் 28 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைப்பதற்கான பூமி பூஜை ஊராட்சி மன்ற தலைவர் குமார் தலைமையில் செப்டம்பர், 1, ஞாயிற்றுக்கிழமை, மதியம் 3 மணிக்கு நடைப்பெற்றது.
நிகழ்ச்சிக்குவட்டார வளர்ச்சி அலுவலர் நீலமேகம் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் குமார் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைப்பதற்கான பணியை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணைத் தலைவர் முனியம்மாள் சண்முகம், வார்டு உறுப்பினர்கள் ராமலிங்கம், சின்னசாமி, ஊர் கவுண்டர் செல்வம், முன்னாள் கவுன்சிலர் சீனி, பாமக நிர்வாகி சங்கர், சத்யராஜ், ஊராட்சி செயலாளர் சிவலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக