தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலக வளாகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தின் 38வது அமைப்பு தின விழா கொண்டாட்டம் வட்ட கிளை தலைவர் குணசேகரன் தலைமையில் நடைப்பெற்றது. நிகழ்ச்சிக்கு வட்ட கிளை செயலாளர் ஜோதிகணேசன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்ட கிளை செயலாளர் மாணிக்கம், முன்னாள் மாவட்ட செயலாளர் சேகர் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள், நிகழ்ச்சியில் வட்ட கிளை தலைவர் குணசேகரன் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு சங்க கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
இதில் நிர்வாகிகள் கலந்து கொண்டு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் குறித்தும் சங்கத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்ட முன்னோடிகள் குறித்தும் எடுத்துரைத்தனர். இந்நிகழ்ச்சியில் வட்ட கிளை நிர்வாகிகள், மற்றும் உறுப்பிணர்கள் திரளாக கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்புக்கள் வழங்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக