தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் வழியாக அரசால் தடை செய்யப் பட்ட குட்கா பொருட்கள் கடத்தப்படுவதாக எஸ்.பி மகேஸ்வரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது உத்தரவின்பேரில் காரிமங்கலம் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர்.
அப்போது, அகரம் பிரிவு ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டி இருந்தபோது அந்த வழியே வேகமாக வந்த சொகுசு காரை நிறுத்துமாறு சைகை செய்தனர். போலீசாரை கண்டதும் காரை நிறுத்தி விட்டு டிரைவர் ஓட்டம் பிடித்தார். உடனே, போலீ சார் அந்த காரில் சோதனையிட்டனர். அதில், பெங்களூருவில் இருந்து அரசால் தடை செய்யப் பட்ட குட்கா பொருட்கள் கடத்தி வரப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது.
இதையடுத்து, சுமார் ₹4 லட்சம் மதிப்பிலான 360 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் சொகுசு காரை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக