பி.செட்டி அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஜெர்தலாவ் ஏரியில் 5 ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யும் பணியில் பள்ளி மாணவர்கள் மற்றும் பெண்கள் ஈடுபட்டனர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 9 செப்டம்பர், 2024

பி.செட்டி அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஜெர்தலாவ் ஏரியில் 5 ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யும் பணியில் பள்ளி மாணவர்கள் மற்றும் பெண்கள் ஈடுபட்டனர்.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியம், பி.செட்டி அள்ளி ஊராட்சியின் சார்பில் 5 ஆயிரம் பனை விதைகள் நடும் பணியினை ஊராட்சி மன்ற தலைவர் கணபதி ஜெர்தலாவ் ஏரிக்கரையில் பனை விதை நட்டு தொடங்கி வைத்தார்.


அதனை தொடர்ந்து தீத்தாரஅள்ளி, பாறையூர், பி.செட்டி அள்ளி,  கொம்மநாயக்கனஅள்ளி வரை சுமார்  இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்க்கு ஏரிக்கரை மற்றும்  சாலையோரங்களில்  பனை விதைகளை நடவு செய்யும் பணியில் மகாத்மாகாந்தி தேதிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்கள் ஈடுபட்டனர்.


இந்நிகழ்ச்சியில் ஊர் கவுண்டர், மந்திரிகவுண்டர், நாட்டு கவுண்டர், பாறையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள்  என திரளானோர் கலந்து கொண்டு விதை நடும் பணியில் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad