அதனைத் தொடர்ந்து தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், பைசுஅள்ளி சங்கமித்ரா திருமண மண்டபத்தில் மகளிர் திட்டம் சார்பில் 5515 பயனாளிகளுக்கு ரூ.58.92 கோடி மதிப்பில் மகளிர் சுய உதவிக்குழு வங்கிக்கடன் உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆ. மணி, பாலக்கோடு சட்ட மன்ற உறுப்பினர் திரு. கே. பி. அன்பழகன், பென்னாகரம் சட்ட மன்ற உறுப்பினர் திரு.ஜி.கே. மணி, தருமபுரி சட்ட மன்ற உறுப்பினர் திரு. எஸ்.பி.வெங்கடேஷ்வரன், பாப்பிரெட்டிப்பட்டி சட்ட மன்ற உறுப்பினர் திரு.ஆ.கோவிந்தசாமி, அரூர் சட்ட மன்ற உறுப்பினர் திரு. வே. சம்பத்குமார் ஆகியோர் முன்னிலையில் இன்று (09.09.2024) வழங்கினார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:- ஊரக ஏழை மக்களின் வறுமையை ஒழிப்பதற்கும், மகளிரின் சமூக பொருளாதார ஆற்றலை மேம்படுத்துவதற்கும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பல்வேறு நலதிட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். அதன்படி தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், வட்டார அளவிலான கூட்டமைப்புகள் உள்ளிட்ட சமுதாய அமைப்புகளை ஊரகப்பகுதிகளில் உருவாக்கி அதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், வருமானத்தை பெருக்கவும், இத்திட்டம் பெரிதும் உறுதுணையாக உள்ளது.
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க நிதி தவிர சுய உதவிக் குழுக்களின் பொருளாதார கடன் தேவைகளை பெருமளவில் பூர்த்தி செய்திடும் பொருட்டு வங்கிக் கடன் வழங்கப்பட்டு வருகிறது. ஒரே பகுதியில் வசிக்கக் கூடிய மக்கள் தங்களின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்காக தாங்களாகவே முன்வந்து ஏற்படுத்திக்கொண்ட அமைப்பு சுய உதவிக்குழு ஆகும்.
தருமபுரி ஒன்றியத்தில் 28 சுய உதவிக்குழுவினருக்கும், ஏரியூர் ஒன்றியத்தில் 13 சுய உதவிக்குழுவினருக்கும், அரூர் ஒன்றியத்தில் 17 சுய உதவிக்குழுவினருக்கும்,, கடத்தூர் ஒன்றியத்தில் 28 சுய உதவிக்குழுவினருக்கும், காரிமங்கலம் ஒன்றியத்தில் 27 சுய உதவிக்குழுவினருக்கும், மொரப்பூர் ஒன்றியத்தில் 35 சுய உதவிக்குழுவினருக்கும், நல்லம்பள்ளி ஒன்றியத்தில் 23 சுய உதவிக்குழுவினருக்கும், பாலக்கோடு ஒன்றியத்தில் 66 சுய உதவிக்குழுவினருக்கும், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில் 32 சுய உதவிக்குழுவினருக்கும், பென்னாகரம் ஒன்றியத்தில் 30 சுய உதவிக்குழுவினருக்கும், தருமபுரி நகராட்சியில் 41 சுய உதவிக்குழுவினருக்கும், அரூர் பேரூராட்சியில் 11 சுய உதவிக்குழுவினருக்கும், கடத்தூர் பேரூராட்சியில் 16 சுய உதவிக்குழுவினருக்கும், பொ.மல்லாபுரம் பேரூராட்சியில் 22 சுய உதவிக்குழுவினருக்கும், பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியில் 10 சுய உதவிக்குழுவினருக்கும், காரிமங்கலம் பேரூராட்சியில் 8 சுய உதவிக்குழுவினருக்கும், கம்பைநல்லூர் பேரூராட்சியில் 7 சுய உதவிக்குழுவினருக்கும், மாரண்டஅள்ளி பேரூராட்சியில் 18 சுய உதவிக்குழுவினருக்கும், பாலக்கோடு பேரூராட்சியில் 30 சுய உதவிக்குழுவினருக்கும், பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் 7 சுய உதவிக்குழுவினருக்கும், பென்னாகரம் பேரூராட்சியில் 9 சுய உதவிக்குழுவினருக்கும் என மொத்தம் 478 சுய உதவிக்குழுவை சேர்ந்த 5515 பயனாளிகளுக்கு ரூ.58.92 கோடி மதிப்பில் வங்கி இணைப்பு கடன்கள், தொழில் கடன்கள், தனி நபர் கடன்கள், மகளிர் சுய உதவிக்குழு வங்கிக்கடன் உதவிகள் இன்றைய தினம் வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார். தொடர்ந்து பயனாளிகளுக்கு புதிய மிண்ணனு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் திருமதி.அ.லலிதா, முன்னாள் அமைச்சர் திரு. பி.பழனியப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.தடங்கம் பெ.சுப்பிரமணி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திருமதி.மலர்விழி, உதவி திட்ட அலுவலர்கள் திருமதி.சந்தோசம், திரு.பா.சஞ்சீவிகுமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.ராமஜெயம், ஒன்றியக் குழு தலைவர் திருமதி.சாந்தி பெரியண்ணன், பேரூராட்சி தலைவர்கள் திரு.வீரமணி, திருமதி.பிருந்தா, திருமதி.இந்திராணி, திருமதி.மகேஷ்வரி, ஊராட்சி மன்ற தலைவர் திரு.மகேந்திரன், வட்டாட்சியர் திரு.கோவிந்தராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமதி.சத்யா, திரு.கணேசன், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், வங்கி மேலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக