பாலக்கோடு‌ அருகே உள்ள சாமியார் நகரில் ஸ்ரீசீனிவாச பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேத திருக்கல்யாண வைபவ திருவிழா. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 30 செப்டம்பர், 2024

பாலக்கோடு‌ அருகே உள்ள சாமியார் நகரில் ஸ்ரீசீனிவாச பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேத திருக்கல்யாண வைபவ திருவிழா.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள சாமியார் நகரில் எழுந்தருளியுள்ள  ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீசீனிவாச பெருமாளுக்கு 5ம் ஆண்டு  திருக்கல்யாண வைபவ திருவிழா நடைப்பெற்றது.

இதனையடுத்து விக்கிரகங்களுக்கு  பல்வேறு திரவியங்களால் அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு மகா தீபாரதனை காட்டப்பட்டது. இத்திருக்கல்யாணத்தை முன்னிட்டு ஏராளனமான பெண்கள் சீர்வரிசை தட்டுடன் ஊர்வலமாக வந்து ஸ்ரீனிவாசாபெருமாளுக்கு  நிச்சயதார்த்தம் செய்து வைத்தனர்.

அதனை தொடர்ந்து ஸ்ரீசீனிவாச பெருமாளுக்கு ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் மங்கள இசை முழங்க  திருக்கல்யாணம் நடந்தேறியது. சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதம் ஸ்ரீ சீனிவாச பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.


திருமணம் ஆகாத கன்னி பெண்கள், இளைஞர்கள் சுவாமி திருக்கல்யாணத்தில் கலந்து கொண்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பதும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம், இதனால்  விழாவையொட்டி  சுற்று வட்டார பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து சுவாமிக்கு மொய் பணம் செலுத்தினர். அதனை தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.



இவ்விழாவிற்கான ஏற்பாட்டை பக்தர்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad