7.5 சதவீதம் உள் இட ஒதுக்கீட்டில் is மருத்துவம் படிக்க தேர்வான 7 மாணவர்களுக்கு 1 லட்சத்து 26 ஆயிரம் வழங்கிய மூத்த மருத்துவர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 19 செப்டம்பர், 2024

7.5 சதவீதம் உள் இட ஒதுக்கீட்டில் is மருத்துவம் படிக்க தேர்வான 7 மாணவர்களுக்கு 1 லட்சத்து 26 ஆயிரம் வழங்கிய மூத்த மருத்துவர்.


தர்மபுரி மாவட்டத்தில் அரசு பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்று 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 100 மேற்பட்ட மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர். 


இந்த நிலையில் பென்னாகரம் பகுதியை சேர்ந்த மாங்கரை அரசு பள்ளியில்  படித்த மஞ்சநாயக்கன அள்ளியை சேர்ந்த அகிலா, பூவரசு, திலீப் குமார்,தின்னுரை சேர்ந்த சக்திவேல் கலப்பம்பாடி அரசு பள்ளியில் பயின்ற பெரிய கடமடையை சேர்ந்த முத்தமிழ் அரசு, பி. அக்ரகாரம் அரசு பள்ளியில் பயின்ற  சீலநாயக்கனூரை சேர்ந்த ஸ்ரீரங்கன் பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவர் விஜய் ஆகியோர் மருத்துவம் படிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களை பாராட்டும் வகையில் பொன்னம்மாள் நஞ்சையா அறக்கட்டளை சார்பில் மூத்த மருத்துவர் தியாகராஜன் அவர்கள் 7மாணவர்களுக்கு தலா ₹ 18 ஆயிரம்வீதம் 1லட்சத்து 26ஆயிரம் வழங்கினார். 


தொடர்ந்து தேவையான உதவிகள் செய்வதாக உறுதியளித்தார். இந்த நிகழ்ச்சியில் பாப்பாத்தி தியாகராஜன்,தமிழ்நாடு மின்சார வாரிய மேற்பார்வையாளர் சுமதி,மருந்தாளுநர் பிரதாப் குமார், மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வு அரசுப்பள்ளியில் படித்த மாணவர்களை ஊக்கப்படுத்தும் நிகழ்வாக அமைந்துள்ளது.


பென்னாகரம் பகுதியில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு பொன்னம்மாள் நஞ்சைய்யா அறக்கட்டளையின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad