தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு முத்துகவுண்டர் தெருவை சேர்ந்த விவசாயி பழனி(வயது.65), இவர் எர்ரணஹள்ளி ஊராட்சி சாமியார் நகர் கிராம பகுதியில் மூன்று ஏக்கர் விவசாய தோட்டத்தில், தக்காளி, நிலக்கடை பயிரிட்டுள்ளார்,காட்டு பன்றிகளை விரட்ட செப்டம்பர், 23ம் தேதி நேற்றிரவு தோட்டத்தில் காவலில் ஈடுபட்டிருந்தார், நள்ளிரவில் அவ்வழியாக வந்த ஒற்றை காட்டு ஆண் யானை முதியவரை கண்டதும் ஆக்ரோஷமாக அவரை தாக்கி தந்தத்தால் குத்தி, மிதித்து கொன்றது. இதையறிந்த பொதுமக்கள் காவல் துறைக்கும், வனத்துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து வந்த பாலக்கோடு காவல் துறையினர் விவசாயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து இன்று வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நேற்று செங்கோடப்பட்டி முதியவரை இதே ஒற்றை யானை மிதித்து கொன்ற நிலையில் அதே காட்டு யானை நள்ளிரவு விவசாயியை கொன்றுள்ளது, அடுத்தடுத்து இரண்டு நாட்களில் இரண்டு பேர் யானை தாக்கி இறந்த சம்பவம் விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடயே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக