கல்கூடப்பட்டி ரைஸ் மில் முன்பு செப்டிக் டேங்க் லாரி மோதி கூலி தொழிலாளி படுகாயம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 15 செப்டம்பர், 2024

கல்கூடப்பட்டி ரைஸ் மில் முன்பு செப்டிக் டேங்க் லாரி மோதி கூலி தொழிலாளி படுகாயம்.


தருபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த செங்கோடப்பட்டி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி இடியேந்திரன் (வயது .50) இவர் நேற்று முன்தினம் இரவு பாலக்கோட்டில் இருந்து செங்கோடப்பட்டி கிராமத்தை நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.


கல்கூடப்பட்டி ரைஸ் மில் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த செப்டிக் டேங்க் லாரி இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது, இதில் இடியேந்திரனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.


அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து  இடியேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் பாலக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad