நாமக்கல் மாவட்டத்தை பெளத்திரம் புதுர் கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் பழனிசாமி (வயது. 54) இவர் நேற்று முன்தினம் இரவு சுமார் 8 மணிக்கு ஓசூரில் இருந்து நாமக்கல் நோக்கி சரக்கு லாரியை ஓட்டி வந்தார்.
பாலக்கோடு அடுத்த எர்ரனஅள்ளி தேசிய நெடுஞ்சாலையின் ஓரம் லாரியை நிறுத்திவிட்டு டீ குடிப்பதற்காக செல்போன் பேசிக் கொண்டே சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது பெங்களுரில் இருந்து திருச்செங்கோடு நோக்கி வந்த சொகுசு கார் லாரி டிரைவர் மீது மோதியது, இதில் லாரிடிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சொகுசு காரை ஓட்டி வந்த திருச்செங்கோட்டை சேர்ந்த தினேஷ் படுகாயமடைந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த பாலக்கோடு போலீசார் லாரி டிரைவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தினேசை மீட்டு சிகிச்சைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து பாலக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து க விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக