இந்த நிகழ்ச்சியில் மாரத்தான் ஓட்டப் பத்தயத்துக்கான சின்னத்தை தமிழ்நாடு தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளரும், தொழிலதிபருமான டி.என்.சி. இளங்கோவன் வெளியிட்டார். இதில் ரோட்டரி எலைட் சங்க தலைவர் விஜய் சங்கரன், செயலாளர் டாக்டர் மணிமாறன், பொருளாளர் வித்தியபூர்ணா, மாரத்தான் ஒருங்கிணைப்பாளர் விக்ரமன், திபா சில்க்ஸ் இயக்குனர் தியாகராஜன், எஸ்.என்.எஸ் தங்க மாளிகை உரிமையாளர் ராஜசேகர் மற்றும் உறுப்பினர்கள், தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்.
இளைய சமுதாயம் போதைப் பழக்கத்திற்கு எதிராக கைகோர்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக நடைபெறும் விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு சான்றிதழ், பதக்கம் மற்றும் ரூ. 75 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்படும். இந்த போட்டியில் கலந்து கொள்ள ரூ.199 நுழைவு கட்டணம் செலுத்த வேண்டும்.
பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு ரூ. 99 செலுத்த வேண்டும். இந்த மாரத்தான் போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் வருகிற 15-ம் தேதிக்குள் www.rcdharmapurielite.in என்ற இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக