மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கம்பைநல்லூர் நகர கிளை மாநாடு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 24 செப்டம்பர், 2024

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கம்பைநல்லூர் நகர கிளை மாநாடு.


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கம்பைநல்லூர் நகரக் கிளை மாநாடு கம்பைநல்லூர் சமுதாய கூடத்தில் இன்று நடைபெற்றது. சே.ஹானஸ்ட் ராஜ் மாநாட்டிற்கு தலைமை தாங்கினார். மாநாட்டின் கொடியை கம்பைநல்லூர் பேருந்து நிலையத்தில் பெ.அழகுதுரை ஏற்றியதை தொடர்ந்து மாநாடு துவங்கியது. பேருந்து நிலையத்தில் இருந்து மாநாடு ஊர்வலமாக நடந்து சமுதாயக்கூடம் மாநாட்டு அரங்கத்திற்கு சென்று மாநாடு துவங்கியது. 


அஞ்சலி தீர்மானத்தை பெ. அருண்மதி  வாசித்தார். துவக்க உரை வட்டச் செயலாளர் பி.ஜெயராமன் பேசினார். மாநாட்டின் வாழ்த்துரை ரா.சிசுபாலன் மாநில குழு,மாவட்ட செயற்குழு உறுப்பினர் கிரைசா மேரி ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். கட்சியினுடைய மூன்றாண்டு வேலைகளை கிளைச் செயலாளர் அ.மாதேஸ்வரன் சமர்ப்பித்தார். 


பிறகு வேலை அறிக்கையின் மீது விவாதம் மற்றும் கிளைச் செயலாளர் தேர்வு நடைபெற்றது. மீண்டும் நகர கிளை செயலாளராக அ.மாதேஸ்வரன்  தேர்வு செய்யப்பட்டார். மாநாட்டு நிறைவுறையாக அ.குமார் மாவட்ட செயலாளர் சிறப்புரையாற்றினார். 


அதனைத் தொடர்ந்து மாநாட்டு தீர்மானங்களாக கம்பைநல்லூர் பகுதியில் சார் பதிவாளர் அலுவலகம் அமைத்திட வேண்டும், ஈச்சம்பாடி அணைக்கட்டில் இருந்து ஏரிகளுக்கு நீர் நிருப்பும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கி பணிகளை துவங்கிட  வேண்டும், மூன்றாவது வார்டில் உள்ள தலாவ் ஏரிக்குச் செல்லும் கால்வாயை முழுமையாக சீர்படுத்த வேண்டும், கம்பைநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அரசு மானிய இடங்களில் வாழ்ந்து வரும் மக்களுக்கு வகை மாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும்.


மேலும், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு நீதிபதிக்கு மாணவிகள் தங்கும் விடுதி அமைத்திட வேண்டும், கம்பைநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி 24 மணி நேரம் மருத்துவமனையில்  தங்கி மக்களுக்கு மருத்துவ சேவை வழங்கிட வேண்டும் ஆகிய தீர்மானங்களை ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 


மாநாட்டில் வட்டக் குழு உறுப்பினர் முருகேசன் சூடாமணி ஜி டி மனோகரன் ஆதிமூலம் ஆறுமுகம் சேட்டு மணிகண்டன் வினித் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad