நகர செயலாளர் ராஜசேகர் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக மாநில கெளரவதலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ, மாவட்ட செயலாளர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ ஆகியோர் கலந்து கொண்டு காவேரி உபரி நீர் திட்டத்தின் அவசியம் குறித்தும், விவசாயிகளின் வாழ்வாதாரம் குறித்தும் பேசியவர்கள், இத்திட்டத்தை நிறைவேற்றக்கோரி வரும் அக்டோபர் 4ம் தேதி நடைபெற உள்ள அரைநாள் கடை அடைப்பு போராட்டத்தை முழுமையாக வெற்றி பெற செய்ய நிர்வாகிகள் தங்கள் பகுதிகளில் உள்ள வணிகர்கள், வியபாரிகள், கடை உரிமையாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்டேரிடம் எடுத்து கூறி ஆதரவு திரட்ட ஆலோசனை வழங்கினர்.
இந்த ஆலோசனைக்கூட்டத்தில் மாநில இளைஞர் சங்க செயலாளர் முருகசாமி, ஒன்றிய செயலாளர்கள் துரை, சுகர்மில்துரை, மற்றும் நிர்வாகிகள் பாலாஜி, ராஜவேல், வி.எம்.சேகர், கே.இ..கிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர்கள் சுப்பிரமணி, மாவட்ட இளைஞர் சங்க துணை செயலாளர் சிலம்பு பிரகாஷ், பொப்பிடி முருகேசன், மாதையன், வேடி, ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
கூட்ட முடிவில் முன்னாள் நகர செயலாளர் சான் பாஷா நன்றி தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக