குழந்தை திருமணம் மற்றும் பாலியல் குற்றங்கள் முற்றிலும் தடுக்கப்பட வேண்டும் - மாவட்ட ஆட்சித்தலைவர் - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 26 செப்டம்பர், 2024

குழந்தை திருமணம் மற்றும் பாலியல் குற்றங்கள் முற்றிலும் தடுக்கப்பட வேண்டும் - மாவட்ட ஆட்சித்தலைவர்


தருமபுரி மாவட்டத்தில் குழந்தை திருமணம் மற்றும் பாலியல் குற்றங்கள் முற்றிலும் தடுக்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவு.  தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுகூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுகூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமையில் இன்று (25.09.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:- தருமபுரி மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் மற்றும் பாலியல் குற்றங்கள் நடைபெறாதவாறு தடுக்கப்பட வேண்டும். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இதுக்குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். 


அனைத்து கிராமங்களிலும் இதுக்குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அனைத்து கிராமங்களிலும் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவானது மூன்று மாதத்திற்கு ஒரு முறை கூடி குழந்தை திருமணம் தடுத்தல் மற்றும் பாலியல் குற்றங்கள் தடுத்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். குழந்தை திருமணம் நடைபெறுவது முன்கூட்டியே கண்டறியப்பட்டு அத்திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும். அக்குறித்த தகவலை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.


வளரிளம் பருவ கருத்தரித்தல் குறித்து பள்ளி கல்வித்துறையுடன் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும். நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் வார்டு அளவில் குழந்தைகள் பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கல்வி நிறுவனங்கள் அருகில் போதை பொருட்கள் விற்பதை கண்காணிக்க வேண்டும். போதைப்பொருட்களால் பாதிக்கப்படும் குழந்தைகள் கண்டறியப்பட்டு மறுவாழ்வு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 


பள்ளி  இடைநிற்றல் குழந்தைகள் கண்டறியப்பட்டு அவர்கள் கல்வியினை தொடர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குழந்தை தொழிலாளர்கள் குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளபட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்தார். இக்கூட்டத்தில் தருமபுரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்ரீதர், இளைஞர் நீதிக்குழுமம் முதன்மை நடுவர்.திருமதி.எழிலரசி, இளைஞர் நீதிக்குழும உறுப்பினர் திரு.சரவணன், குழந்தை நலக்குழு உறுப்பினர் திருமதி.பிரமிளா, இணை இயக்குநர் சுகாதாரம் மரு.சாந்தி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி.செண்பகவள்ளி, மருத்துவ கல்வி முதல்வர் மரு.அமுதவல்லி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திரு.நடராசன் மற்றும் துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்துக்கொண்டனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad