தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் (06.09.2024) அன்று ஆய்வு மேற்கொண்டார்.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், ஏ.ஜெட்டிஅள்ளி ஊராட்சி, தேங்காமரத்துப்பட்டி அங்கன்வாடி மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டு, சமையலறை, குழந்தைகளுக்கான அடிப்படை வசதிகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்தும் கேட்டறிந்தார். அருகிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு, மாணவர்களின் கற்றல் திறன் மற்றும் பள்ளியின் அடிப்படை வசதிகள் குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தார்.
மேலும், ஓட்டப்பட்டி PWD காலனியில் ரூ.9.96 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டு, குடிநீர் குழாய் அமைப்பதையும் ஆய்வு செய்து, பணிகளை, குறிப்பிட்ட காலத்திற்குள் விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்க்கு கொண்டுவர அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்.
இந்த ஆய்வின்போது, நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.சர்வத்தமன், திரு.லோகநாதன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக