தருமபுரி மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளிலிருந்து விவசாய/ மட்பாண்ட தொழிலுக்கு இதுவரை 70564 கனமீட்டர் வண்டல்/களிமண் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
இன்று (28.09.2024) தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இலளிகம் ஏரி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பாப்பன் குட்டை ஏரி ஆகியவற்றில் இருந்து விவசாய பயன்பாட்டிற்கு வண்டல் எடுத்துச்செல்வதை ஆய்வு செய்த மாவட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது: தருமபுரி மாவட்டத்தில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 42 ஏரிகள் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 111 ஏரிகள் ஆக மொத்தம் 153 ஏரிகள் விவசாய பயன்பாடு மற்றும் மட்பாண்ட தொழிலுக்கு வண்டல்/ களிமண் எடுக்க தகுதி வாய்ந்த நீர்நிலைகளாக கண்டறியப்பட்டு மாவட்ட அரசிதழில் பிரசுரம் செய்யப்பட்டு இணையதள வாயிலாக 1168 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதில் 677 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு 70564 கனமீட்டர் வண்டல்/ களிமண் எடுக்க வட்டாட்சியர்களால் அனுமதியளிக்கப்பட்டு விவசாயிகள் மற்றும் மட்பாண்ட தொழிலாளர்கள் பயன்பெற்று வருகின்றனர்.
மேலும் விவசாய நிலத்தை மேம்படுத்தவும், மட்பாண்ட தொழிலுக்கு பயன்படுத்தவும் விவசாயிகள் மற்றும் மட்பாண்ட தொழிலாளர்கள் உரிய ஆவணங்களுடன் https://tnesevai.tn.gov.in என்ற இணையதள முகவரியில் அருகில் உள்ள இ-சேவை மையங்களை அணுகி விண்ணப்பித்து பயன்பெறலாம். இச்சிறப்பான திட்டத்தினை பயன்படுத்தி எதிர்வரும் பருவ மழை காலத்தில் விவசாய பணிகளை மேற்கொள்ள இந்த வண்டல்/ களிமண் மூலம் விவசாய நிலங்களை மேம்படுத்திக்கொள்ள மாண்புமிகு தமிழக முதலர்வர் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார் என்று தெரிவித்தார் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள். மேலும் ஆய்வின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பயனாளிகளிடம் இத்திட்டம் தொடர்பாக கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின் போது துணை இயக்குநர், புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குநர் முனைவர்.கு.பன்னீர்செல்வம், நல்லம்பள்ளி வட்டாட்சியர் திரு.சிவக்குமார், நீர்வளத்துறை உதவி பொறியாளர் திருமதி.மாலதி, உதவி புவியியலாளர் திரு.புவனமாணிக்கம், நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.சர்வோத்தமன் மற்றும் திரு.லோகநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக