பாலக்கோடு காவல் நிலையத்தில் நாடளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை அவதூறாக பேசிய பாஜகவினர் மீது வழக்கு பதிவு செய்ய கோரி காங்கிரஸ் கட்சியினர் புகார். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 24 செப்டம்பர், 2024

பாலக்கோடு காவல் நிலையத்தில் நாடளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை அவதூறாக பேசிய பாஜகவினர் மீது வழக்கு பதிவு செய்ய கோரி காங்கிரஸ் கட்சியினர் புகார்.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு காவல் நிலையத்தில் நாடளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை  அவதூறாக பேசிய பாஜகவினர் மீது  வழக்கு பதிவு செய்ய  கோரி பாலக்கோடு நகர காங்கிரஸ் கட்சியின் சார்பில் நகர தலைவர் கணேசன் தலைமையில் புகார் அளித்தனர்.


புகாரில் மகாராஷ்டிரா மாநிலம்  ஷிண்ட சேனா கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. சஞ்சய் கெய்க்வாட், இரயில்வே இணை அமைச்சர் ரவீநீத்பிட்டு, உத்திர பிரேதச மாநில அமைச்சர் ரகுராஜ்சிங்,  பாஜக தலைவர் தர்விந்தர் சிங் மர்வா, தமிழ்நாடு பாஜக பொறுப்புக் குழு தலைவர் H. ராஜா உள்ளிட்ட 5 நபர்களும் ராகுல் காந்தியை அவதூறு பேசி அச்சுறத்தல் ஏற்படுத்தி வருவதாகவும், அவர்கள் 5 பேர் மீதும் கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என புகாரில் தெரிவித்துள்ளனர்.


அது சமயம் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சண்முகம், மாவட்ட பொது செயலாளர் ரங்கசாமி, வட்டார தலைவர் ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் செந்தில்குமார், விவசாயஅணி மாவட்ட தலைவர் அன்பழகன், நகர துணை தலைவர் பாலாஜி குமார், மற்றும் நிர்வாகிகள் ரகமத்துல்லா, சீதாராமன், ராஜகோபால், கோவிந்தசாமி, அஸ்வத் குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad