தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியம் கரகத அள்ளி ஊராட்சியில் உள்ள அவுசிங்போர்டு குடியிருப்பில் உள்ள ஒரு பகுதியின் சுற்றுசுவர் அகற்றப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்க்காக அப்பகுதி வழியாக மெயின் ரோட்டிற்க்கு தார்சாலை அமைக்க, கரகதஅள்ளி ஊராட்சி நிர்வாகம் முயற்சி மேற்கொண்டு வந்தது,
இதற்கு அப்பகுதியை சேர்ந்த ஒரு சிலர் அவுசிங் போர்டு சுற்று சுவர் என்பது இப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி கட்டப்பட்டது என்றும், அதனை இடித்து விட்டு அவ்வழியாக பொது வழி சாலை அமைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து சாலை அமைக்கும் பணியை நிறுத்தினர். இது தொடர்பாக ஊராட்சி மன்றம் சார்பில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தார்சாலை அமைக்க வேண்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன், இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது,
இதனை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக போலீசாரின் பாதுகாப்புடன் சுற்று சுவரை அகற்றிவிட்டு பொதுவழி சாலை அமைக்க உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து நேற்று கரகதஅள்ளி ஊராட்சி சார்பில் சுற்று சுவர் அகற்றப்பட்டு பொதுவழி தார்சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக