தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் ஆலோசனைக் கூட்டம் ஒன்றிய குழு தலைவர் பாஞ்சாலை தலைமையில் நடைபெற்றது, கூட்டத்திற்க்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீனா, ரேனூகா, துணைத் தலைவர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற வரவு செலவு கணக்குகளை அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.
அதனை தொடர்ந்து நடைப்பெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வதும் குறித்தும், கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் விடுபட்ட பயனாளிகளுக்கு வீடு வழங்குவது குறித்தும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்து தண்ணீர் விநியோகித்தல், ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, சாக்கடை கால்வாய் அமைத்தல்,தளவாய்அள்ளி புதுர் கிராமத்தில் பழுதாகி உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கட்டிடத்தை புதுப்பித்தல் உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர்கள் அழகுசிங்கம், முத்துசாமி, முத்தப்பன், லதா ராஜாமணி, ஜோதிதுரை, உள்ளிட்ட கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக