பாலக்கோட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட மாநாடு குறித்து வரவேற்பு குழு அமைப்புக் கூட்டம் - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 30 செப்டம்பர், 2024

பாலக்கோட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட மாநாடு குறித்து வரவேற்பு குழு அமைப்புக் கூட்டம்


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு எம்.ஜி. சாலையில் உள்ள தனியார் கூட்டரங்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்ட மாநாடு குறித்து வரவேற்பு குழு அமைப்புக் கூட்டம் வட்ட செயலாளர் ராமசந்திரன் தலைமையில் நடைப்பெற்றது. கூட்டத்திற்க்கு மாவட்ட செயலாளர் குமார், மாநில குழு நிர்வாகி கிசுபாலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் நாகராசன், மூத்த தலைவர் இளம்பரிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இக்கூட்டத்தில் பாலக்கோட்டில் வருகின்ற டிசம்பர் 13, 14, 15 ஆகிய தேதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 வது மாவட்ட மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவது குறித்து, திட்டமிடுதலும், மாநாட்டிற்காக வரவேற்பு குழு அமைப்புக் குழு  அமைக்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.


இக்கூட்டத்தில் மாவட்ட செயற்குழு தோழர்கள், இடைக் குழு செயலாளர்கள் . வட்டக் குழு தோழர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad