பள்ளிகளில் காலாண்டு தேர்வு முடிந்த நிலையில் மாணவர்களுக்கு விடுமுறை என்பதாலும் இன்று ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை தினம் என்பதாலும் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் சுற்றுலா பயணிகள் வருகை காலை முதல் இருந்தே அதிகரித்து வந்துள்ளனர்.
அவ்வாறு குவியும் சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி செய்து, ஆயில் மசாஜ் செய்து கொண்டு அருவி மற்றும் ஆற்றுப்பகுதிகளில் குளித்தும் மகிழ்கின்றனர். மேலும் கூட்டம் கூட்டமாக வரும் சுற்றுலாப் பயணிகள் தங்களது குடும்பங்களுடன் மீன் சமையல் அருந்தி மகிழ்ந்தனர். காலாண்டு தேர்வு முடிந்து விடுமுறை தினம் தொடங்கியதால் இனி ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக