மனைபட்டா கேட்டு தீண்டாமை ஒழிப்பு முன்னணி குடியேறும் போராட்டம் மனைபட்டா வழங்க அலுவலர் உறுதி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 30 செப்டம்பர், 2024

மனைபட்டா கேட்டு தீண்டாமை ஒழிப்பு முன்னணி குடியேறும் போராட்டம் மனைபட்டா வழங்க அலுவலர் உறுதி.


மஞ்சநாய்க்கன அள்ளி, கலப்பம்பாடி ஊராட்சி பட்டியலின மக்களுக்கு மனைபட்டா கேட்டு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் பென்னாகரம் வட்டம் கடமடை 5 ஆவது மைல்கலில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், மஞ்சநாயக்கனஅள்ளி ஊராட்சி, கடமடை வருவாய் கிராமத்தில் உள்ள சர்வே எண்: 40/2 பி - யில் ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் 9.88 ஏக்கர் நிலத்தில் மனைபட்டாவிற்காக 2001-லிருந்து மஞ்சநாயக்கனஅள்ளி மற்றும் கலப்பம்பாடி ஊராட்சிகளுக்கு உட்பட்ட சின்னகடமடை,பெரியகடமடை, நரசிம்மபுரம், ஏட்டிக்குழி, ஜே.ஜே.நகர், புரட்டன்காடு,7 ஆவதுமைல், காட்டம்பட்டி, தளி அள்ளி, கோப்பை உள்ளிட்ட 11 கிராமங்களில் உள்ள 651 பேர் ஆதிதிராவிடர் மற்றும் அருந்ததியமக்கள் மனு கொடுத்து போராடி வருகிறார்கள். 


அவர்களுக்கு பட்டா வழங்குவதாக அனுமதிக்கப்பட்ட நிலத்தில் பட்டா கேட்டு பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியபிறகும் காலதாமதம் செய்துவருகினறனர்.இந்த போக்கை  கண்டித்தும் உடனடியாக மனைபட்டா கேட்டு  செப் -30. தோழர் பி.சீனிவாசராவ் நினைவுதினத்தன்று அன்று கடமடை 5 ஆவது மைல்கல் கிராமத்தில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது.


தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலசிறப்புத்தலைவர் எஸ்.கே.மகேந்திரன்,தலைமைவகித்தார மாவட்ட தலைவர் பி.ஜெயராமன்,மாவட்ட செயலாளர் ஏ.சேகர், மாவட்ட பொருளாளர் கே.கோவிந்தசாமி, மாநிலக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் டி.மாதையன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ.குமார் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.சிசுபாலன்,மூத்த தலைவர் பி.இளம்பரிதி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.மாதன் எம்.முத்து, வி.ரவி, சோ.அருச்சுணன், எஸ்.கிரைஸாமேரி,  ஆர்.மல்லிகா கிழக்கு ஒன்றியசெயலாளர் ஜி.சக்திவேல், மாவட்டக்குழு உறுப்பினர் பி.ஜீவானந்தம் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே.என்.மல்லையன் , தீண்டாமை ஒழிப்பு முன்னணி வட்ட தலைவர் மா.தேவன்,செயலாளர் ஜே.பி.சுப்பிரமணி, பொருளாளர் எஸ்.வெள்ளிங்கிரி உள்ளிட்டோர் பேசினர்.


தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முண்ணியின் மாநில சிறப்பு தலைவர் எஸ்.கே.மகேந்திரன் பேசியதாவது, மஞ்சநாய்க்கன அள்ளி கலப்பம்பாடி ஊராட்சிகளுக்கு உட்பட்ட 11 கிராம பட்டியலின மக்களுக்கு வீட்டு மனைபட்டா வழங்கவேண்டும் என்று 2001 ம் ஆண்டு முதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தீண்டாமை ஒழிப்பு முண்ணனியும்  போராடிவருகிது. மாவட்ட நிர்வாகத்துக்கும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். ஆதிதிராவிடர் நலத்துறையிடம் கடமடை வருவாய் கிராமத்திற்குட்பட்ட பகுதியில் 9.88 ஏக்கர் நிலம் ஆதிதிராவிடர் நலத்துறையால் கையகப்படுத்தப்பட்டு நீண்டகாலமாக பட்டா வழங்கப்படாமல் உள்ளது.


ஆதிதிராவிடர் நலத்துறையால் கையகப்படுத்தப்பட்ட  நிலத்தில்  மனைபட்டா வழங்கவேண்டும்.என கோரி தொழிலாளி வர்க்கத்தின் தலைவர் தோழர் பி.சீனிவாசராவ் நினைவு தினத்தில் குடியேறும் போராட்டம் நடத்திவருகிறோம்.இந்த பிரச்சனைக்கு தீர்வு காணவில்லை என்றால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தீண்டாமை ஒழிப்பு முண்ணனியும் நிலத்தை பிரித்து கொடுக்கும் வேலையில் இறங்கும் என பேசினார்.


இதனையடுத்து போராட்ட களத்திற்கு நேரில் வந்து பென்னாகரம் வட்டாட்சியர் ஆறுமுகம் வருவாய் ஆய்வாளர் விஜயசாந்தி,கிராம நிர்வாக அலுவலர்கள் சக்திவேல் ரத்தினவேல் பென்னாகரம் டிஎஸ்பி ராஜசுந்தர் ஆகியோர் சங்க தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.


மஞ்சநாய்க்கன அள்ளி கலப்பம்பாடி ஊராட்சிக்குபட்ட 11 கிராமத்தில் உள்ள பட்டியலின மக்களுக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட 9.88 ஏக்கர் நிலத்தில் ஒரு மாதத்திற்குள் அளந்து மனைபட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தனர்.


இதனையடுத்து போராட்டம் தற்காலிக கைவிடப்பட்டது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad