தருமபுரி உணவு வங்கியின் 550-வது நாள் விழாவில் 250 நபர்களுக்கு உணவு வழங்கள்; தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேசன் அவர்கள் பங்கேற்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 7 செப்டம்பர், 2024

தருமபுரி உணவு வங்கியின் 550-வது நாள் விழாவில் 250 நபர்களுக்கு உணவு வழங்கள்; தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேசன் அவர்கள் பங்கேற்பு.


தருமபுரி மாவட்டத்தில் ஏழை எளிய மக்களுக்கு  உணவு வழங்கும்  நோக்கத்தோடு 20 தொண்டு  நிறுவனங்கள் இணைந்து தருமபுரி உணவு வங்கி என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி கடந்த ஒன்னரை ஆண்டுகளாக ஏழை, எளியோருக்கு இலவச உணவு உணவினை தர்மபுரி மாவட்ட நல்லுள்ளம் கொண்ட நன்கொடையாளர்களைக் கொண்டு சிறப்பாக தருமபுரி அரசு மருத்துவமனை எதிரில் தினமும் மதியம் 12 45 மணிக்கு  உணவு வழங்கி வருகிறது.


இன்று  550 வது நாள் முன்னிட்டு,  சிறப்பு அழைப்பாளராக தருமபுரி சட்ட மன்ற உறுப்பினர் திரு. எஸ். பி வெங்கடேஸ்வரன் அவர்கள் கலந்து கொண்டு ஏழை எளியோருக்கு உணவு வழங்கியும், நன்கொடையாளர்களை கௌரவித்தும், தர்மபுரி உணவு வங்கி பொறுப்பாளர்களுக்கு வாழ்த்தும் தெரிவித்தார்.


550 வது தினத்தை முன்னிட்டு இன்று சீட்ஸ் தொண்டு நிறுவனம், தீபம் தொண்டு நிறுவனம், பசியில்லா தர்மபுரி மற்றும் நோ ஃபுட் வேஸ்ட் அமைப்பின் சார்பில் கோகிலவாணி பழனியம்மாள், மணிகண்டன் துர்க்கை அம்மன் குடும்பத்தார், இந்தூர் ரவி அவர்களின் குடும்பத்தார், அருர் தீபம் கற்பகவல்லி அண்ணாதுரை அவர்களின்  குடும்பத்தார்கள் 200 நபர்களுக்கு மதிய உணவு  வழங்கி சிறப்பித்தார்கள்.


இந் நிகழ்வில் திரு. சரவணன், சீட்ஸ் தொண்டு நிறுவனம், திரு.வ .வினோத்குமார் - பசியில்லா தருமபுரி, திரு.கோகுல் - No Food Waste, O.K. கிருஷ்ணமூர்த்தி - தகடூர் தூண்கள் ஆகிய தொண்டு நிறுவனங்கள், வன்னியர் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன், மற்றும் தன்னர்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


இன்றைய நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் O.K.  கிருஷ்ணமூர்த்தி தகடூர் தூண்கள் தருமபுரி அவர்கள் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad