மாண்புமிகு கழக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க மாண்புமிகு கழக இளைஞரணி செயலாளர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் அவர்களின் ஆலோசனைபடியும் மாண்புமிகு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அவர்களின் வழிகாட்டுதலின்படி தருமபுரி மேற்கு மாவட்டத்தில் ஒன்றிய பேரூர் வாரியாக பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடந்து முடிந்தது இதனை தொடர்ந்து தர்மபுரி மேற்கு சார்பில் மாவட்ட திமுக பொது உறுப்பினர் ஆலோசனை கூட்டம் வருகின்ற செப்டம்பர் 13-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் அரூர் கொங்கு வேளாளர் கவுண்டர்கள் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது அது சமயம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஒன்றிய பேரூர் கிளைக் கழக நிர்வாகிகள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் சார்பு அணி நிர்வாகிகள் தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் பொது உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இக்கூட்டத்தில் கழக முப்பெரும் விழா குறித்தும் 2026 சட்டமன்ற தேர்தல் குறித்தும் கட்சியின் ஆக்க பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என தனது அறிக்கையில் மேற்கு மாவட்ட கழக செயலாளர் முனைவர் பி.பழனியப்பன் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக