பாலக்கோடு பேரூராட்சியில் 15 ஆவது நிதி குழு திட்டத்தின் கீழ் நடைபெறும் கட்டுமான பணிகளை உதவி இயக்குநர் கணேஷ் திடிர் ஆய்வு - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 10 செப்டம்பர், 2024

பாலக்கோடு பேரூராட்சியில் 15 ஆவது நிதி குழு திட்டத்தின் கீழ் நடைபெறும் கட்டுமான பணிகளை உதவி இயக்குநர் கணேஷ் திடிர் ஆய்வு


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சியில் உள்ள மந்திரி கவுண்டர் தெருவில் 15 ஆவது நிதி குழு திட்டத்தின் கீழ் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெறும் சிமெண்ட் சாலை மற்றும் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணிகளை பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் கணேஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அதனை தொடர்ந்து அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6 வது நிதிக் குழு திட்டத்தின் கீழ் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெறும் கழிப்பிடம் கட்டும் பணி ஆய்வு செய்யப்பட்டது, ஆய்வின் போது டைல்ஸ் ஒட்டும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்ததை பார்வையிட்டு பணியினை விரைந்து முடிக்கும்படி  அறிவுறுத்தினார்.

மேலும் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது செயல் அலுவலர் இந்துமதி மற்றும் இளநிலை பொறியாளர் முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad