தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே கருங்கால்பாடி கிராமத்தைச் சேர்ந்த கட்டுமான தொழிலாளர் சண்முகம் என்பவர் மின்சாரம் தாக்கி கடந்த 8 -6 -2024 மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிர் இழந்துவிட்டார் இறந்த தொழிலாளி கட்டுமான உறுப்பினர் என்பதால் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் மூலம் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரிய உறுப்பினர் என்பதால் குடும்பத்திற்கு விபத்து நிதி வேண்டி மனு தாக்கல் செய்யப்பட்டது.
அனைத்து விசாரனைகளும் முடிந்து இன்று அதற்கான உத்தரவை ஜெ.பழனி அவர்களின் தீவிர முயற்ச்சியால் ரூபாய் 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கான உத்தரவை உயிரிழந்த சண்முகம் மனைவி செந்தாமரை இடம் வழங்கியினார் இதில் மாவட்ட துணை தலைவர் சி.சின்னபாப்பா மாவட்ட பொருளாளர் வெள்ளையம்மாள் கோபால் மற்றும் ஏராளமானோர் கலந்து சொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக