தர்மபுரி ஸ்ரீராமா போர்டிங் கே.ஆர்.கே சுந்தரமஹால் அரங்கில் தர்மபுரி உணவு பாதுகாப்பு அலுவலர் குமணன் வரவேற்புடன், ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நந்தகோபால், கந்தசாமி,அருண், திருப்பதி,மற்றும் சரண் முன்னிலையில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் ஏ.பானுசுஜாதா, எம்.பி.,பி.எஸ்., அவர்கள் தலைமையில் இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையத்தால் அங்கீகாரம் பெற்ற பயிற்சி பார்ட்னர் 'நோ புட் வேஸ்ட்' பயிற்றுனர் திருமதி. கோகிலம், நிகழ்வில் பங்கேற்ற உணவு வணிகர்களுக்கு பயிற்றுவித்தார் . இதில் தர்மபுரி, பாலக்கோடு, காரிமங்கலம் மொரப்பூர், கடத்தூர், கம்பைநல்லூர், திப்பம்பட்டி , நல்லம்பள்ளி , பொம்மிடி, அரூர் என மாவட்டம் முழுவதும் உள்ள பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட நடமாடும் உணவு வணிகர்கள் இரு பிரிவுகளாக பங்கேற்றனர்.
உணவு பாதுகாப்புதுறை அங்கீகாரம் பெற்ற பயிற்சி பார்ட்னர் நோ புட் வேஸ்ட்' அமைப்பின் பயிற்றுனர் கோகிலம் நடமாடும் உணவு வணிகர்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் தன்சுத்தம் ,சுற்றுப்புற சுத்தம் ,பொருள் மேலாண்மை, பொருட்கள் வாங்குதல், இருப்பு வைத்தல், தயார் செய்தல், கையாளுதல், பரிமாறுதல், மேலும் பூச்சிகள் கட்டுபாடு, நான்கு விதமான பொருட்கள் கெடுவதற்கான சூழ்நிலைகள் தவிர்த்தல் (4D), குடிநீர் தன்மை, உணவு பொருள் பாக்கெட்டுகளில் காண வேண்டிய விவரங்கள் குறித்தும் , குளிர் பதன பெட்டிகளில் பால் பொருட்கள் மற்றும் இறைச்சிகள் வைத்திருக்க வேண்டிய குளிர்நிலை குறித்தும் தெளிவாக விளக்கினார்.
மாவட்ட நியமன அலுவலர் திருமதி.பானு சுஜாதா, அவர்கள் தலைமை உரையில் மாவட்டத்தில் உணவு வணிகர்கள் உணவு பொருள்களை சுத்தமாக, தரமானதாக தயார் செய்யவும், உணவினால் ஏற்படும் இடர்பாடுகளை தவிர்க்கவும் இப் பயிற்சி உதவியாக இருக்கும் என்றார்.
மேலும் இனி நடமாடும் உணவு வணிகர்ளுக்கான உணவு பாதுகாப்பு சான்றிதழ் வருட கட்டணம் விலக்கு அளிக்கப்படுகிறது. 5 ஆண்டுகள் வரை நடமாடும் உணவு வணிகர்கள் புதியது மற்றும் புதுப்பித்தல் உணவு பாதுகாப்பு சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம் . மாவட்டத்தில் அனைத்து உணவு வணிகர்களும் உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் சான்றிதழ் பெற்றிருத்தல் அவசியம் எனவும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழி பொருள்களை தவிர்க்கவும் வலியுறுத்தினார்.
நிகழ்வில் உணவு பாதுகாப்பு அலுவலர் நந்நகோபால், உணவுப் பொருட்களில் வீட்டளவில் எளிய முறையில் கலப்படம் கண்டறிதல் செயல் விளக்கம், குறிப்பாக தேயிலை, தேன், சாயம் ஏற்றப்பட்ட பட்டாணி மற்றும் அயோடின் உப்பு, அயோடின் இல்லாத உப்பு வேறுபாடு குறித்து நேரடி செயல் விளக்கம் செய்து காட்டினார்.
ஒரு முறை பயன்படுத்தி உபயோகப்படுத்திய சமையல் எண்ணெய் மறுபயன்பாட்டுக்கு உணவு பாதுகாப்பு துறை அங்கீகாரம் பெற்ற ரூகோ டீலர் அளித்து உரிய தொகை பெரும் வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு செய்தார்.
நிகழ்வில் உணவக மற்றும் பேக்கரி சங்க செயலாளர் திரு.வேணுகோபால் பங்கேற்று நன்றி உரையாற்றினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக