அரூர் அரசு பள்ளிகளில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 10 செப்டம்பர், 2024

அரூர் அரசு பள்ளிகளில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது

 


அரூர் அரசு பெண்கள்  மேல்நிலைபள்ளி மற்றும் ஆண்கள் மேல்நிலைபள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது, இந்நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர்கள்  இராணி ஆறுமுகம் ஜமனஹள்ளி தலைமை ஆசிரியர் கம்பைநலலூர் தலைமை ஆசிரியர் தீர்த்தமலை தலைமை ஆசிரியர் ஆகியோர் தலைமை வகித்தனர் அரூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வே.சம்பத்குமார் கலந்து கொண்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு  643 மிதிவண்டிகள் வழங்கி அறிவுரை கூறி வாழ்த்தினார்.


இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் இந்திராணி தனபால் துணை தலைவர் சூர்யாதனபால் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சா.இராசேந்திரன் நகர செயலாளர் மற்றும் வார்டு கவுன்சிலர் திமுக முல்லைரவி அதிமுக நகர செயலாளர் பாபு (எ) அறிவழகன் ஒன்றிய செயலாளர் ஆர்.ஆர் பசுபதி பேரூராட்சி உறுப்பினர்கள் மகாலட்சுமி பூபதி  கலைவாணன் கவிஞர் கீரை பிரபாகரன் மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள் பாவாஷா சக்திவேல் உடற்கல்வி ஆசிரியர் சங்கர் எழுத்தாளர் வெங்கடேசன் இருபால்ஆசிரியர்கள் பெற்றோர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad