இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் வெங்கடேசன் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நோக்கத்தை மாணவிகளுக்கு எடுத்துரைத்தும், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு தமிழக முதல்வர் அவர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நலத்திட்டங்களான நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்து அதனுடைய பலன்களை மாணவிகள் பெற்று முன்னேற வேண்டும் என வலியுறுத்தி சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் துணைத் தலைமை ஆசிரியர் கண்ணன், ஆசிரியர்கள் செந்தில், அருள், சுமதி, காயத்ரி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் வீரப்பன், கோவிந்தசாமி, பேரூராட்சி துணைத் தலைவர் கார்த்திகா பன்னீர்செல்வம், பள்ளி மேலாண்மை குழு தலைவர் லட்சுமி மற்றும் உறுப்பினர் யதிந்தர், கவுன்சிலர்கள் கார்த்திகேயன், விஸ்வநாதன், மற்றும் மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக