பஞ்சப்பள்ளி பட்டாபி நகரில் தமிழக முதல்வர் உத்தரவின் பேரில் 32 இருளர் இன மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கிய வருவாய் துறை அதிகாரிகள். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 19 செப்டம்பர், 2024

பஞ்சப்பள்ளி பட்டாபி நகரில் தமிழக முதல்வர் உத்தரவின் பேரில் 32 இருளர் இன மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கிய வருவாய் துறை அதிகாரிகள்.


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த  பஞ்சப்பள்ளி சுற்று வட்டார பகுதியில் வசிக்கும் இருளர் இன மக்கள் தமிழக அரசிடம் வீட்டுமனை பட்டா வேண்டி விண்ணப்பம் செய்திருந்தனர்.


இந்நிலையில் தருமபுரி மாவட்டத்திற்கு சென்ற மாதம் அரசு முறை பயணமாக வருகை புரிந்த தமிழக முதல்வர் அவர்கள் பஞ்சப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் இருளர் இன மக்களின்  வீட்டுமனை பட்டா வேண்டி வைத்த கோரிக்கையை ஏற்று 32  இருளர் இன பெண்களுக்கு  பஞ்சப்பள்ளி பட்டாபி நகரில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் ஒவ்வொரு நபருக்கும் 1200 சதுர அடி வீதம் 32 பேருக்கு பட்டா வழங்க அரசாணை பிறப்பித்தார்.


அதனை தொடர்ந்து  நேற்று பாலக்கோடு  வட்டாட்சியர் ரஜினி, மண்டல துணை வட்டாட்சியர் ஜெகதீசன் மற்றும் வருவாய் ஆய்வாளர் வெங்கடாசலம்,  கிராம நிர்வாக அலுவலர் சிரஞ்சீவி, சர்வேயர்  உள்ளிட்டோர் பட்டாபி நகரில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் ஒவ்வொரு நபருக்கும் நிலத்தை அளவீடு செய்து 32 நபர்களுக்கும் அவர்களது வீட்டுமனைகளை அடையாளம் காட்டி பட்டா வழங்கினார்.


தங்களது கோரிக்கையை ஏற்று உடனடியாக வீட்டு மனைபட்டா வழங்கிய  தமிழக முதல்வருக்கும் வருவாய் துறையினருக்கும்   நன்றி தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad