காரிமங்கலம் அருகே பெட்ரோல் பங்கில் நிறுத்தப்பட்டிருந்த லாரிகளில் 800 லிட்டர் டீசல் திருட்டு! லாரி உரிமையாளர்கள் அதிர்ச்சி! - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 8 செப்டம்பர், 2024

காரிமங்கலம் அருகே பெட்ரோல் பங்கில் நிறுத்தப்பட்டிருந்த லாரிகளில் 800 லிட்டர் டீசல் திருட்டு! லாரி உரிமையாளர்கள் அதிர்ச்சி!


காரிமங்கலம் அருகே பெட்ரோல் பங்கில் நிறுத்தப்பட்டிருந்த லாரிகளில் நடந்த துணிகர டீசல் திருட்டு லாரி உரிமையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பெரியாம்பட்டி, பொன்னேரி, பைபாஸ் ரோடு, மாட்லாம்பட்டி மற்றும் குண்டல்பட்டி ஆகிய பகுதிகளில் சட்டவிரோத டீசல் விற்பனை அதிக அளவில் நடந்து வருகிறது. 


தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் லாரி டிரைவர்களை சரி கட்டி லாரியில் இருந்து டீசல் திருடப்பட்டு கெமிக்கல் கலக்கப்பட்டு லோக்கல் வாகனங்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு திருடப்படும் டீசல் விற்பனை செய்வதற்காக காரிமங்கலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் திருட்டு டீசல் மையங்கள் செயல்பட்டு வருகிறது. போலீசார் மற்றும் அதிகாரிகள் ஆசியுடன் நடந்து வரும் திருட்டு டீசல் விற்பனை குறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. 


இந்நிலையில் தற்போது பெட்ரோல் பங்க், தேசிய நெடுஞ்சாலை உட்பட பல்வேறு இடங்களில் நிறுத்தப்படும் லாரிகளில் இருந்து மர்ம கும்பல் டீசல் திருடி வருகிறது. நேற்று முன்தினம் பெரியாம்பட்டி பைபாஸ் ரோடு பிரிவு ரோட்டில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் 7க்கும் மேற்பட்ட லாரிகளிலிருந்து டீசல் திருடப்பட்டு உள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த சக்திவேல், கோவிந்தசாமி, கண்ணையன், தங்கவேல் ஆகியோருக்கு சொந்தமான லாரிகள் உட்பட 7 லாரிகளில் இருந்து சுமார் 700 லிட்டர் டீசல் திருடப்பட்டு உள்ளது. 


இதன் மதிப்பு 1 லட்சம் ஆகும். அதிகாலை நேரத்தில் காரில் வந்த மர்ம கும்பல் பெட்ரோல் பங்க் பூட்டுகளை உடைத்து டீசல் திருடியதாக லாரி உரிமையாளர்கள் தெரிவித்த நிலையில் லாரி உரிமையாளர் தங்கவேல் இது குறித்து காரிமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்துள்ளார். 


பெட்ரோல் பங்க்கில் நிறுத்தப்பட்டுள்ள லாரிகளில் நடந்த துணிகர டீசல் திருட்டு லாரி உரிமையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad