சரக அளவிலான தடகளப்போட்டியில் பந்தாரஅள்ளி அரசு மேல்நிலை பள்ளி மாணவிகள் சாம்பியன். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 20 செப்டம்பர், 2024

சரக அளவிலான தடகளப்போட்டியில் பந்தாரஅள்ளி அரசு மேல்நிலை பள்ளி மாணவிகள் சாம்பியன்.


தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சரக அளவிலான தடகளப் போட்டிகள் நடந்தது பள்ளி தலைமை ஆசிரியர் பழனிச்சாமி வரவேற்றார் மாவட்ட கல்வி அலுவலர் பரமசிவம் உடற்கல்வி ஆய்வாளர் முத்துக்குமார் ஆகியோர் போட்டியினை தொடங்கி வைத்தனர் போட்டியில் 40 பள்ளிகளை சேர்ந்த 850 மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.


இதில் பெண்கள் பிரிவில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை பந்தாரஅள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகளும், ஆண்கள் பிரிவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களும் சாம்பியன் பட்டத்தை பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் சீனிவாசன் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் வக்கீல் மகேஷ் குமார் முன்னாள் தலைமை ஆசிரியர் மதிவாணன் ஆகியோர் பரிசுக்கோப்பை வழங்கி பாராட்டினர்.


சாதனை படைத்த மாணவிகளையும் பயிற்சி அளித்த பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் A.ஜெயபதி மற்றும் M. விமலன் ஆகியோரை பந்தாரஅள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியின் பள்ளி மேலாண்மைக்குழ தலைவர் T. தேன்மொழி. துணை தலைவர் G. மாரியப்பன், பள்ளி தலைமை ஆசிரியர் S.சரஸ்வதி மற்றும் பள்ளி இருபால் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad