காரிமங்கலம் கும்பாரஅள்ளி சோதனை சாவடியில் அடுத்தடுத்து 2 சொகுசு காரில் கடத்தி வந்த 5 இலட்சம் மதிப்பிலான, 2 டன் குட்கா பறிமுதல் போலீசார் அதிரடி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 11 செப்டம்பர், 2024

காரிமங்கலம் கும்பாரஅள்ளி சோதனை சாவடியில் அடுத்தடுத்து 2 சொகுசு காரில் கடத்தி வந்த 5 இலட்சம் மதிப்பிலான, 2 டன் குட்கா பறிமுதல் போலீசார் அதிரடி.


தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வழியாக தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, பான்மசாலா பொருட்களை  கடத்தி செல்வதாக பாலக்கோடு டி.எஸ்.பி.மனோகரன் அவர்களுக்கு  ரகசிய தகவல் கிடைத்தது. 


இதையடுத்து, அவரது உத்தரவின் விடியற்காலை 4 மணிக்கு  காரிமங்கலம் அடுத்துள்ள கும்பாரஅள்ளி சோதனை சாவடியில் காரிமங்கலம் இன்ஸ்பெக்டர் பார்த்தீபன், எஸ்.ஐ.சுந்தரமூர்த்தி உள்ளிட்ட போலீசார் தீவிர  கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வேகமாக வந்த   2  சொகுசு காரை  சந்தேகமடைந்த போலீசார் தடுத்தி நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 5 இலட்சம்  மதிப்பிலான 2  டன் குட்கா இருந்தது தெரிய வந்தது.


காரை ஓட்டி வந்த இருவரையும் பிடித்து விசாரித்ததில்  கேரளா மாநிலம், மன்னார்காட்டை சேர்ந்த ஜிதிஷ் (வயது.45), சர்பின் (வயது. 29) என்பதும், கர்நாடகா மாநிலம், பெங்களுரில் இருந்து கேரளாவிற்க்கு குட்கா கடத்தி சென்றதும் தெரிய வந்தது. மேலும் தப்பி ஓடியவர்கள் ஜீபீர் மற்றும் ஜிபித் என தெரியவந்தது. அதனை தொடர்ந்து 2 சொகுசு காருடன், குட்காவை பறிமுதல் செய்த போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து ஜிதிஷ், சுருபின் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தர்மபுரி சிறையில் அடைத்தனர். மேலும் தப்பி ஓடிய இருவரையும் தேடி வருகின்றனர்.


காரிமங்கலம் காவல் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்களை  பார்வையிட்ட  டி.எஸ்.பி மனோகரன் கூறுகையில் தொடர்ந்து குட்கா பொருட்கள் கடத்தல் குறித்து தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், குட்கா கடத்துபவர்கள் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படும் என எச்சரித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad