காவேரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த கோரி வரும் 4ஆம் தேதி அரை நாள் கடையடைப்பு நடத்த பாமக தீர்மானம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 23 செப்டம்பர், 2024

காவேரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த கோரி வரும் 4ஆம் தேதி அரை நாள் கடையடைப்பு நடத்த பாமக தீர்மானம்.


பா.ம.க., சார்பில் தருமபுரி – காவிரி உபரிநீர் திட்டம் நிறைவேற்ற வலியுறுத்தி வருகின்ற 04.10.2024 அன்று தருமபுரி மாவட்டம் முழுவதும் அரைநாள் கடையடைப்பு போராட்டம்.


பாட்டாளி மக்கள் கட்சியின் தருமபுரி மாவட்ட ஆலோசனைக் கூட்டம் தருமபுரி வன்னியர் திருமண மண்டபத்தில் பாமக மாவட்ட செயலாளரும், தருமபுரி சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வெங்கடேஷ்வரன் தலைமையில் நடைபெற்றது. 


இக்கூட்டத்திற்கு தருமபுரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மரு.இரா.செந்தில், தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில செயலாளர் இல.வேலுசாமி, மாநில துணைத் தலைவர்கள் பாடிசெல்வம், பி.சாந்தமூர்த்தி, மாநில அமைப்பு செயலாளர் ப.சண்முகம், மாநில இளைஞர் சங்க செயலாளர்கள் எம்.முருகசாமி, பி.வி.செந்தில், மாவட்ட தலைவர்கள் எம்.செல்வகுமார், அல்லிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் இரா.அரசாங்கம் அனைவரையும் வரவேற்றார். பாட்டாளி மக்கள் கட்சி கௌரவத் தலைவரும், பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினருமான ஜி.கே.மணி, தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில தலைவர் ஆலையமணி ஆகியோர் கூட்டத்தில் கலந்துக்கொண்டு பேரூரையாற்றினர். 


கூட்டத்தில், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை, அணி, துணை பொறுப்பாளர்களும், தொண்டர்களும் திரளாக கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். கூட்டத்தில் தருமபுரி – காவிரி உபரிநீர் திட்டம் நிறைவேற்ற வலியுறுத்தி வருகின்ற 04.10.2024 அன்று தருமபுரி மாவட்டம் முழுவதும் அரைநாள் கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. கடையடைப்பு போராட்டம் குறித்து அனைத்து வணிக நிறுவனங்களையும் சந்தித்து ஆதரவு திரட்டி போராட்டம் வெற்றியடைய செய்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கருத்துகள் இல்லை:

Post Top Ad