இராமகொண்டஅள்ளிஅரசு உயர்நிலைப் பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 27 செப்டம்பர், 2024

இராமகொண்டஅள்ளிஅரசு உயர்நிலைப் பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.


தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்து ஏரியூர், அருகே உள்ள இராமகொண்டஅள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

மத்திய அரசின் திதி போஜன் திட்டத்தினை ஊக்குவிக்கும் பொருட்டு அதன் ஒரு பகுதியாக பள்ளிகளில் பயின்று வரும் சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்களுக்கு கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் தொடங்கி 100 நாட்களில் முக்கிய நாட்கள், தேச தலைவர்கள், ஆசிரியர்கள் முக்கிய பிரமுகர்கள் மற்றும் மாணவர்களின் பிறந்தநாளன்று நல் விருந்து வழங்க நடவடிக்கை எடுக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதன்படி  அரசு பள்ளியில் சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்களுக்கு ஒரு நாள் அரிசி, பருப்பு வகைகள் கீரை வகைகள் கொண்டு சுகாதாரமான மற்றும் பாதுகாப்பான முறையில் தயார் செய்யப்பட்ட ஆரோக்கியமான ஊட்டச்சத்து மிகுந்த சமச்சீர் உணவு வழங்க நடவடிக்கை எடுக்க பள்ளி ஆசிரியருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதற்காக நன்கொடையாளர்களை ஏற்பாடு செய்ய பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்தவும் அறிவுரை வழங்கப்பட்டிருந்தது. இதில் ஆரோக்கியமற்ற சக்தி இல்லா உணவுகள் மற்றும் துரித உணவுகள் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்படுகிறது.


இதன் ஒரு பகுதியாக பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சத்துணவு பணியாளர்கள் ஏற்பாட்டின் படி தர்மபுரி மாவட்டம் ஏரியூர் ஒன்றியம் இராம கொண்டஅள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் உள்ள சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் 327 மாணவர்களுக்கு மதிய உணவாக சாதம், சாம்பார், புளி குழம்பு, ரசம், மோர் பொரியல் வடை பாயாசம் மற்றும் அப்பளத்துடன் அறுசுவை உணவு வெள்ளிக்கிழமை மதியம் வழங்கப்பட்டது.


இதில் மாணவர்கள்ஆர்வத்துடன் மதிய உணவினை விரும்பி சாப்பிட்டனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் சத்துணவு அமைப்பாளர் ராதாமணி தமிழாசிரியர் சுப்பிரமணி ஆகியோர் செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad