தருமபுரி மாவட்ட கரும்பு விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 24 செப்டம்பர், 2024

தருமபுரி மாவட்ட கரும்பு விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு.


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தாலூகாவில் உள்ள தருமபுரி மாவட்ட கூட்டுறவு & சர்க்கரை ஆலையில் 2024-2025 ஆம் ஆண்டு அரவைக்கு பதிவு செய்யப்பட்ட பதிவுகரும்பை, ஆலை விதிகளுக்கு புறம்பாக சில இடைத்தரகர்கள் மூலம் தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு அனுபுதல் மற்றும் வெல்லம் ஆலை உரிமையாளர்கள் எடுத்துச்செல்ல முயற்சி செய்து வருகிறார்கள். 

இது சட்டப்படி குற்றமாகும். இதனால் ஆலைக்கும், அரசுக்கும் வருவாய் இழப்பீடு ஏற்படுகிறது. எனவே சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்த கரும்பை முறைகேடான வகையில் வெளிச்சந்தையிலோ அல்லது வெல்லம் தயாரிக்கும் ஆலைக்கோ விற்பனை செய்வதாக மாவட்ட நிர்வாகத்திற்கும் ஆலை நிர்வாகத்திற்கும் புகார்கள் வருகின்றன.


இவ்வாறு முறைகேடுகளில் ஈடுபடும் அங்கத்தினர்கள், இடைத்தரகர்கள் மற்றும் வெல்லம் ஆலை உரிமையாளர்கள் மீது கரும்பு கட்டுப்பாட்டு சட்டம் 1966 மற்றும் அத்தியாவசிய பண்டங்கள் சட்டத்தின் (Act 1955, Sec.7(1)(a)(i)) கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ஆலை பகுதிக்கு உட்பட்ட பதிவு செய்யாத கரும்பை எடுத்து செல்பவர்கள் உரிய கோட்ட கரும்பு அலுவலர் மூலம் தடையில்லா சான்றிதழ் (NOC) பெறவேண்டும். அதன்பிறகே தங்களது கரும்பை வாகனங்களில் ஏற்றிச்செல்ல வேண்டும். அவ்வாறு உரிய ஆவணங்கள் இன்றி கரும்பு ஏற்றிச்செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad