தருமபுரி மாவட்டம், பாலக்கோடு மாரண்டஅள்ளி வெள்ளிச்சந்தை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உணவகங்கள் மற்றும் தேநீர்கடை, பேக்கரிகளில் கடந்த சில மாதங்களாக பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருகின்றது.
பாலக்கோடு பேரூராட்சி மற்றும் மாரண்டஅள்ளி பேரூராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் கடைகள் பேக்கரிகள் உள்ளிட்டவை இயங்கி வருகின்றது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா காலகட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்து இருந்த நிலையில் தற்பொழுது சில மாதங்களாக அண்டை மாநிலமான பெங்களூரில் இருந்து பிளாஸ்டிக் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் எப்பொழுதும் இல்லாத அளவு தற்பொழுது அதிகப்படியான பிளாஸ்டிக் பொருட்கள் புழக்கத்தில் உள்ளது.
இதனால் சுற்றுப்புறச் சூழல் பாதிக்கப்படுவதுடன் சுகாதார சீர்கேடுகள் நிலவும் அபாயம் உள்ளது. அதிகாரிகளுக்கும் தெரிந்தும் தெரியாதது போல் கண்டு கொள்ளாமல் இருப்பதால் தைரியமாக பிளாஸ்டிக் கேரி பேக்குகள் மீண்டும் அதிகரித்து வருகின்றன.
எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க வழி வகை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக