தருமபுரி மாவட்டம், அரூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
தருமபுரி மாவட்டம், அரூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று (26.09.2024) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். தருமபுரி மாவட்டம், அரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் 2023-ஆம் ஆண்டிற்கான ஆண்டு தணிக்கை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் மேற்கொள்ளப்பட்டது.
மேலும், அரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பாரமரிக்கப்படும் பதிவேடுகளை பார்வையிட்டு, பொதுமக்கள் அளிக்கும் தகுதியான கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும் தங்கு தடையின்றி தகுதியான பயனாளிகளுக்கு சென்று அடைவதை உறுதி செய்திடும் வகையில் பணியாற்றிட வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தருமபுரி மாவட்டம், மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோபிநாதம்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.27.83 இலட்சம் மதிப்பீட்டில் கர்த்தான்குளம் பகுதியில் புதிய குளம் அமைக்கும் பணி, தருமபுரி ஊராட்சி ஒன்றியம், மூக்கனூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் ரூ.18.44 இலட்சம் மதிப்பீட்டில் மூக்கனூர் புதிய குளம் அமைக்கும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார்.
மேலும், அரூர் ஊராட்சி ஒன்றியம், அக்ரஹாரம் ஊராட்சி, வெளாம்பட்டி கிராமத்தில் கண்ணன் த/பெ. லிங்க்கவுண்டர் என்பவரது நெல்லி தோப்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மண் வரப்பு அமைக்கும் பணி மற்றும் அரூர் ஊராட்சி ஒன்றியம், கீரைப்பட்டி ஊராட்சியில் ஊரக விளையாட்டு திடல் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்து, பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்க்கு கொண்டுவர அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
தொடர்ந்து, அரூர் பேரூராட்சி அலுவலகத்தில் ஆய்வு செய்து, அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும், பொதுமக்கள் அளிக்கும் தகுதியான கோரிக்கை மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை ஆய்வு செய்ததோடு, அரூர் பேரூராட்சி பேருந்து நிலைய கட்டுமான பணிகளை பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்க்கு கொண்டுவர அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வுகளின்போது, அரூர் கோட்டாட்சியர் திரு.வில்சன் ராஜசேகர், வட்டாட்சியர் திரு.ராதாகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.இளங்கோவன், திரு.அப்துல் காலம் ஆசத் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் மூக்கனூர் ஊராட்சி மன்றத் தலைவர் ஆகியோர் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக