இதில் தர்மபுரி மேற்கு ஒன்றியத்தில் உள்ள 16 ஒன்றியம், 8 பேரூராட்சிகளுக்கு மாணவரணி ஒன்றிய அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர் பேரூர் கழக அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட பொறுப்புகளுக்கு நடைப்பெற்ற நேர்காணலில் 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கு தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆ.மணி, தலைமை கழக மாணவரணி இணைச் செயலாளர் ஜெரால்ட், மாணவரணி மாநில துணைச் செயலாளர் தமிழரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சந்தர், துணை அமைப்பாளர்கள் பிரபு, முனுசாமி, அரவிந்த், சுர்ஜித்,புனிதா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
இதில் திமுக இளைஞர் அணி நிர்வாகிகள், உறுப்பிணர்கள், தொண்டர்கள் கல்லூரி மாணவர்கள் என திரளானோர் கலந்து கொண்டு நேர்காணலில் பங்கேற்றனர்,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக