தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியத்தில் உள்ள 32 ஊராட்சிகளில் வீடு இல்லாத ஏழை, எளிய மக்கள் பாதுகாப்புடன் வசிக்க தமிழக அரசு சார்பில் இலவச வீடு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 2024-25ம் ஆண்டில் சுமார் 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் கட்ட ஜீலை மாதம் பணி ஆணை வழங்கப்பட்டது. இதில் ஒரு வீடுகட்ட குறைந்தபட்ச பரப்பளவு சமையலறை உட்பட 360 சதுர அடியாகவும் அதற்கான தொகை ரூ.3.50 இலட்சம் மூன்று தவனைகளாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
வீடு கட்ட பணி ஆணை பெற்ற ஏழை எளிய மக்கள் வீடு கட்டுவதற்கான தரை தலம் அமைத்து 2 மாதங்கள் கடந்தும் தற்போது வரை ஒரு ரூபாய் கூட தமிழக அரசு தரவில்லை என்றும் கடன் பெற்று தரை தலம் அமைத்துள்ளதாகவும் மேலும் வீடு கட்டுமான பணிகள் தொடர முடியால சூழல் உள்ளதாகவும் தெரிவிக்கின்ளனர். தமிழக அரசு கலைஞரின் கனவு இல்ல திட்ட வீடுகளுக்கு முதல் தவனை தொகையை விடுவிக்க வேண்டும் என பயனாளிகள் கேரிக்கை விடுத்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக