தருமபுரி மாவட்டம், ஏ.பள்ளிப்பட்டி அருகேயுள்ள கல்லாத்துக்காடு கிராமத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள அருள்மிகு ஸ்ரீமகாமுத்து மாரியம்மன், ஆலய மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
மகா கும்பாபிஷேக விழாவினையொட்டி கொடியேற்றுதல் மற்றும் கங்கணம் கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து கறிக்கோல உற்சவம்,தாரை தப்பட்டை முழங்க 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற புனித தீர்த்தக் குட ஊர்வலம் அம்மன் வேஷம் மற்றும் வானவேடிக்கையுடன் நடைபெற்றது. தொடர்ந்து முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.
இன்று (08-ம்தேதி) காலை 9.30 மணிக்கு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது இதனையடுத்து சாமிகளுக்கு பல்வேறு அலங்காரங்களுடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது, விழா ஏற்பாடுகளை கல்லாத்துக்காடு ஊர் பொதுமக்கள் செய்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக