பாலக்கோட்டில் கஞ்சா விற்ற வாலிபர் கைது 300 கிராம் கஞ்சாவுடன் மொபட் பறிமுதல் செய்து சிறையில் அடைப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 28 செப்டம்பர், 2024

பாலக்கோட்டில் கஞ்சா விற்ற வாலிபர் கைது 300 கிராம் கஞ்சாவுடன் மொபட் பறிமுதல் செய்து சிறையில் அடைப்பு.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த ரெட்டியூர் கிராமத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த இரகசிய தகவலின் பேரில்  பாலக்கோடு போலீசார் ரெட்டியூர் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஹரிதீபக் (வயது. 20) என்ற வாலிபர் மொபட்டில்  பிளாஸ்டிக் பையை மறைத்து வைத்துக் கொண்டு நின்றிருந்தார்.

சந்தேகமடைந்த போலீசார் அவரை பிடித்து பையை சோதனை செய்ததில் சிறு சிறு பொட்டலங்களாக 3 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 300 கிராம் அளவிலான கஞ்சா இருந்தது தெரிய வந்தது, அதனை தொடர்ந்து கஞ்சா மற்றும் மொபட்டை  பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தர்மபுரி சிறையில் அடைத்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad