தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த சிக்கார்தனஅள்ளி கிரமத்தை சேர்ந்தவர் சக்திவேல் இவரது வீட்டின் முன்பு வேப்பமரம் உள்ளது. இவரது மனைவி தீபா இன்று காலை வேப்பமரம் அருகே சென்றபோது மரத்தில் பால் வடிந்ததது கண்டு ஆச்சரியமடைந்து குடும்பத்தினரிடம் கூறினார்.
குடும்பத்தினர் இதனை கண்டு மாரியம்மன் தான் வேப்ப மரத்தில் இறங்கியுள்ளார் என்றும் அதனால் தான் மரத்தில் பால் வடிகின்றது எனக் கூறி மரத்திற்க்கு மஞ்சள் குங்குமம் பூசி, பூ வைத்து கற்பூர தீபாரதனை காட்டி வழிபட்டனர். இத்தகவல் வாட்ஸ் ஆப் மற்றும் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.
இதனைக் காண ஏராளமான பக்தர்கள் வந்து வேப்ப மரத்தில் பால் வடிவதை கண்டு வழிபட்டு சென்றனர். இச்சம்பவம் பக்தர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தி உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக