வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் போலி ஒத்திகை பயிற்சி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 28 செப்டம்பர், 2024

வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் போலி ஒத்திகை பயிற்சி.


வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் போலி ஒத்திகை பயிற்சியை தீயணைப்பு மீட்பு குழுவினர் மேற்கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் துறை பகுதியில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் போலி ஒத்திகை பயிற்சி மேற்கொள்ளப்பட்டன.  


எதிர்வரும் நாட்களில் வடகிழக்கு பருவமழை பெய்ய துவங்கும் நிலையில் மாவட்ட ஆட்சியர் சாந்தி அவர்களின் உத்தரவின் பெயரில் நீர்நிலைகள் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க மழைக்காலங்களில் தங்களை பாதுகாத்து கொள்வது குறித்து பல்வேறு செய்முறை விளக்கங்கள் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டன. 


இதில் தீயணைப்பு மீட்பு குழு வீரர்கள் போலி ஒத்திகை பயிற்சி மேற்கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad