தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 74 வது பிறந்த நாளை முன்னிட்டு பாஜக நகர தலைவர் கணேசன் தலைமையில் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மத்திய நலத்திட்ட பிரிவு மாவட்ட துணைத் தலைவர் பி.கே.சிவா, மாவட்ட பொதுசெயலாளர் வெங்கட்ராஜ், மாவட்ட செயலாளர் தெய்வமணி, மாவட்ட துணைத் தலைவர் முரளி, மாவட்ட மீனவர் அணி தலைவர் மாதையன் ஆகிேயோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பிணர் பாஸ்கர் கலந்து கொண்டு பாஜக கொடி ஏற்றி வைத்து, இனிப்புக்கள் வழங்கி சிறப்புரை ஆற்றினார். அதனை தொடர்ந்து 1000 நபர்களுக்கு தென்னை மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பாஜக மாவட்ட, ஒன்றிய, மண்டல் பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக