அரூர் மேல்பாட்சாப்பேட்டை பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள தையல் பயிற்சி மையத்தில் அன்னை தெரேசாவின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது, இந்நிகழ்ச்சிக்குதீப்பொறி கே.செல்வம் தலைமை தாங்கினார், அரூர் வட்டார தலைவர் கே.வசந்தி வரவேற்றார் சிறப்பு விருந்தினராக அன்னை தெரசா பேரவையின் தருமபுரி கிழக்கு மாவட்ட தலைவர் தீப்பொறிசெல்வம் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கியும் ஆதரவற்றோர் முதியோர் இல்லத்திற்கு அறுசுவை உணவுகள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு பேனா பென்சில் வழங்கி அன்னை தெரசா இலவச தையல் பயிற்சியில் பயிற்சி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.
இதில் ஆசிரியர்கள் பழனிதுரை பேரவை மாவட்ட செயலாளர் ஏ.செல்வராஜ் முதுநிலை வருவாய் ஆய்வாளர் ஆர்.சின்னண்னன் மதிமுக ஒன்றிய செயலாளர் வடுகைவேலாயுதம் சமூக ஆர்வலர் பசுமைசீனிவாசன் எஸ்.விஜயகுமார் தையல் பயிற்சி ஆசிரியர் கே.ஜெயந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக