இன்று (19.09.2024) மூன்றாவது கட்டமாக பென்னாகரம் அரசுக் கலைக் கல்லூரில் உயர்வுக்குப் படி முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாணவர்களிடையே பேசியதாவது:- பண்ணிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி அடைந்துள்ள மாணவர்கள், தேச்சியடையாத மாணவர்கள் பல்வேறு குடும்ப சூழ்நிலை மற்றும் பொருளாதார காரணமாக உயர்கல்வி தொடராத நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகதான் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் உயர்வுக்கு படி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. உயர்கல்வி பயில்வதன் மூலம் ஏற்படும் வேலைவாய்ப்புகள் குறித்து உயர்வுக்கு படி நிகழ்ச்சிகளில் மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக தருமபுரி மாவட்டத்தில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தருமபுரி, அரூர் தற்போது பென்னாகரம் ஆகிய இடங்களில் நடத்தப்பட்டுள்ளது. மேலும் பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர் பகுதியிலும் உள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் உயர்வுக்குப் படி விழிப்புணர்வு நிகழ்ச்சி பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலைக்கல்லூரில் நடைபெற உள்ளது.
தருமபுரி மற்றும் அரூர் ஆகிய இரு இடங்களில் நடைபெற்ற உயர்வுக்குப் படி முகாம்கள் மூலம் சுமார் 360 மாணவ-மாணவிகள் உயர்கல்வி பயில வாய்பு ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ அரசின் புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் ஆகிய திட்டங்களின் பயன்கள் குறித்து மாணவர்கள் அறிந்துகொள்ள வேண்டும். மாணவர்களின் உயர்கல்விக்கு இத்திட்டங்கள் பெரிதும் பயனளித்து, ஊக்கப்படுத்தி வருகிறது.
பேருந்து வசதி இல்லை என்ற காரணத்தை கூறி யாரும் உயர்கல்வியில் சேருவதற்கு தயங்க வேண்டாம். அப்பகுதிகளில் அரசு விடுதிகள் உள்ளது. இந்த விடுதிகளில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இதை பயன்படுத்தி சிறந்த முறையில் உயர்கல்வியை தொடரவேண்டும்.
தருமபுரி மாவட்டத்தில் படித்த மாணவர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் சுயத் தொழில் பயிற்சிகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தருமபுரியில் விரைவில் சிப்காட் தொழிற் பூங்கா அமைய உள்ளது. நமது மாவட்டத்திற்கு அருகில் உள்ள ஓசூரில் விமான நிலையம் அமைய உள்ளது. இந்த வாய்ப்புகளை தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் பயன்படுத்திக்கொண்டு பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகளில் இணைய வேண்டும்.” என்று கேட்டுக்கொண்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக