மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வேளாண்மைத்துறை சார்பில் சத்துமிகுசிறுதானியங்களின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சத்துமிகு சிறுதானியங்கள் என்ற தலைப்பில் விழிப்புணர்வு பிரசார ஊர்தியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வேளாண்மைத்துறை சார்பில் சத்துமிகு சிறுதானியங்களின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சத்துமிகு சிறுதானியங்கள் என்ற தலைப்பில் விழிப்புணர்வு பிரசார ஊர்தியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் 23.09.2024 அன்று கொடியசைத்து தொடங்கி வைத்து, சத்துமிகு சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கினார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது, இந்திய அரசு சோளம், கம்பு, ராகி, தினை, வரகு, பனிவரகு, குதிரைவாலி, சாமை, கோட்டு (மரகோதுமை) மற்றும் ராஜ்கிரா (விதை கீரை) போன்ற சத்துமிக்க தானியங்களை சத்துமிகு சிறுதானியங்கள் என அறிவிக்கை செய்துள்ளது. சத்துமிகு சிறுதானியங்கள் நாட்டின் உணவு உற்பத்தி மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. சிறுதானியங்கள் ஊட்டச்சத்து மிக்கவையாக விளங்குகிறது.
எந்த ஒரு தட்பவெட்ப நிலையிலும் மீண்டு எழுகிற தன்மையுடையது. சர்க்கரை நோய் எதிர்ப்பு தன்மையுடையது. தருமபுரி மாவட்டம் பெரும்பான்மையாக மானாவாரி சாகுபடி செய்யும் மாவட்டமாகும். இங்கு மானாவாரி வேளாண்மை மற்றும் மானாவாரி விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் சிறுதானியங்களின் பங்கு மிக முக்கியமாக உள்ளது. பொதுவாக ராகி 15,611 எக்டர், சோளம் 30,114 எக்டர், கம்பு 176 எக்டர் மற்றும் சாமை 4,806 எக்டரில் சாகுபடி செய்யப்படுகிறது. உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்புத் திட்டம் (சத்துமிகு சிறுதானியங்கள்) 2024 - 25 ம் ஆண்டில் விவசாயிகளுக்கு மானிய விலையில் ராகி, சோளம், கம்பு மற்றும் சாமை விதை உற்பத்தி மற்றம் விநியோகம், ராகி, சோளம், கம்பு மற்றும் சாமை செயல்விளக்கத்திடல், சிறுதானிய நுண்ணூட்டம், உயிர் உரங்கள், உயிரியல் காரணிகள் மற்றும் திட்ட விளம்பரம், சிறுதானிய விழிப்புணர்வு, விவசாயிகளுக்கு பயிற்சி என இத்திட்டத்தின் கீழ் ரூ.535.5 லட்சத்தில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் துவங்கிய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்ட பிரச்சார வாகனங்கள் 23.09.2024 முதல் 28.09.2024 வரை அனைத்து வட்டாரத்திலுள்ள கிராமங்களில் சென்று சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படும். தமிழ்நாட்டில் சிறுதானியம் விளைவிக்கும் மாவட்டங்களில் தருமபுரி மாவட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. வேளாண்மைத்துறை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் சத்துமிகு சிறுதானியங்களின் முக்கியத்துவம், சிறுதானியங்களின் சாகுபடி தொழில்நுட்பம், சிறுதானியங்களின் மதிப்பு கூட்டுதல் மற்றும் சிறுதானிய உணவில் உள்ள சத்துக்கள் பற்றி தெரு காட்சி வண்டி, (Road show) மூலம் அனைத்து கிராமங்களுக்கும் சென்று எடுத்துக்கூற உள்ளனர்.
விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி நடப்பு பருவம் மற்றும் ரபி 2024 அதிக அளவில் சிறுதானிய சாகுபடி செய்ய வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குநர் திரு.வி.குணசேகரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திருமதி.சித்ரா, வேளாண்மை துணை இயக்குநர்கள் திருமதி.இரா.தேன்மொழி, திருமதி.அருள்வடிவு, வேளாண்மை உதவி இயக்குநர் திரு.தினேஷ், வேளாண் அலுவலர் திரு.சதீஸ் குமார் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக