தர்மபுரி அடுத்த பைசுஹள்ளியில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் இயற்பியல் துறை சார்பாக "பொருட்களில் இயற்பியலின் சமீபத்திய முன்னேற்றம் குறித்த தேசிய பட்டறை" என்ற தலைப்பில் நடைபெற்றது முனைவர் செல்வபாண்டியன் துறை தலைவர் இயற்பியல் துறை மற்றும் பயிற்சி பட்டறை அமைப்பாளர் அவர்கள் பயிற்சி பட்டறையின் மைய கருத்தான இயற்பியல் தாக்கத்தால் அனைத்து விதமான பொருள்களும் பண்புகளுக்கு ஏற்ப உருவாக்கப்படுகிறது என்பதை எடுத்துக்கூறி வரவேற்புரை நிகழ்த்தினார்.
சிறப்பு விருந்தினர்கள் முனைவர் இரையா "பல்வேறு பயன்பாடுகளுக்கு சில திறமையான ஆக்சைடு நானோபாஸ்பர்களின் தாவர மத்தியஸ்த உயிரியக்கவியல்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார் திரு.பாஸ்கர் "ரயில்வே சிக்னலில் எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் பயன்பாடுகள்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார் முனைவர்நந்தகுமார் "மின்சார புலம் மட்பாண்டங்களை செயலாக்க உதவுகிறது" என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கினார் முனைவர் மோகனசுந்தரம் இயக்குனர் பொறுப்பு அவர்கள் தலைமை உரை நிகழ்த்தினார் முனைவர் பிரசாந்த் நன்றியுரை நிகழ்த்தினார். முனைவர் கோபாலகிருஷ்ணன் முனைவர் செந்தில் இரண்டாம் ஆண்டு இயற்பியல் துறை மாணவர்கள் இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக