இன்று விடியற்காலை அவ்வழியாக வந்த ஒற்றை காட்டு ஆண் யானை முதியவரை கண்டதும் ஆக்ரோஷமாக அவரை தந்தத்தால் குத்தி, மிதித்து கொன்றது. இதையறிந்த பொதுமக்கள் வனத்துறையை கண்டித்து செங்கோடபட்டி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
சமீபத்தில் செங்கோடப்பட்டி அருகே உள்ள தீத்தாரப்பட்டியில் முதியவரை இதே ஒற்றை யானை மிதித்து கொன்ற நிலையில் மீண்டும் ஒருவரை கொன்றுள்ளது. யானை நடமாட்டம் இருப்பது தெரிந்தும் வனத்துறையினர் எவ்வித முன் எச்சரிக்கையும் செய்யவில்லை, யானையை அடர்ந்த காட்டுக்குள் விரட்டாமல் வேடிக்கை பார்த்து வருகின்றனர்.
இதனால் தினம், தினம், அச்சத்துடனே வாழ்வாதாகவும், மேலும் விளை நிலங்களில் பயிடப்படும் நிலக் கடை, கரும்பு, நெல், தக்காளி, வாழை, உள்ளிட்ட எந்த விளைபொருளும் பாதுகாக்க முடியவில்லை என கூறி வனத்துறையின் மெத்தன போக்கை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த பாலக்கோடு போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனை தொடர்ந்து முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து பாலக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக